in

மழையின் காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்


Watch – YouTube Click

மழையின் காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

 

கோடை மழையின் காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்..

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்வதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்வது வழக்கம்.

சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசி பாறை பகுதிகளில் உள்ள ஊற்று நீர் மற்றும் ஹைவேஸ் அணைப்பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் சுருளி அருவியில் அருவியாய் வந்து கொட்டுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. மேலும் மழை இல்லாமல் இருந்த காரணத்தினால் சுருளி அருவியில் நீர் வரத்தினின்றி இரண்டு மாதமாக வரண்ட நிலையில் சுருளி அருவி காட்சியளித்து வந்தது. இதனால் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அருவியில் சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர் வரத்து பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் இன்று நீர்வரத்து துவங்கியது. இதனை அடுத்து விடுமுறை காலத்தில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குடும்பத்துடன் சுருளி அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

அருவி நீர் வரத்து பகுதிகளில் மழையளவு அதிகமாக உள்ள காரணத்தினால் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து உற்சாகமாக குளித்துவிட்டு செல்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

காலை முதல் லேசான மழை புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல்

அமெரிக்காவில் பூனைக்கு கெளரவ டாக்டர் பட்டம்