கொடைக்கானலில் படகு போட்டி சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
கொடைக்கானலில் படகு போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 17ஆம் தேதி கோடை விழா தொடங்கியது. ஒவ்வொரு துறை சார்பிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
கோடை விழா நிகழ்வின் சிறப்பு அம்சமாக நட்சத்திர ஏரியில் சுற்றுலாத்துறை சார்பாக படகு போட்டி நடைபெற்றது.
போட்டியினை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் துவங்கி வைத்தார் . இப்போட்டிகளில் ஆண்களும் பெண்களுமாக சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மூன்று விதமான படகு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்களுக்கான படகு போட்டிகள் பெண்களுக்கான படகு போட்டிகள் கலப்பு இரட்டையர்களுக்கான மிதி படகு போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீதர் வசந்தன் ஜோடி முதல் பரிசும், ஜெயா கௌதமன் நிஷாந்த் ஆகியோர் இரண்டாவது பரிசும், ஜெயசூர்யா பிரசாந்த் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் ஹில்மா, போதி சித்தார்த் ஜோடி முதல் பரிசும், சுதாகர், வரலட்சுமி ஜோடி இரண்டாவது பரிசும், செந்தில்குமார் பாரதி ஜோடி மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பெண்களுக்கான இரட்டையர் படகு போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவிகளான நிவேதியா, ஸ்ரீது ஜோடி முதல் பரிசையும், காவியா, ஆதித்யா ஜோடி இரண்டாவது பரிசையும், சங்கீதா, சுதா ஆகியோர் மூன்றாவது பரிசையும் பெற்றனர். படகு போட்டியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.