Toxic மக்களே…இணையத்தில் கொந்தளித்த த்ரிஷா
நடிகை நயன்தாரா அண்மையில் தனக்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று அறிவித்தார்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான Good Bad uUgly படத்தில் நடித்திருந்த திரிஷாவை பார்த்த திரிஷாவின் ரசிகர்கள் ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார்…னா அது எங்க த்ரிஷா தான் அப்படின்னு சோசியல் மீடியாவில் பதிவிட இதனைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் GBU…வில் திரிஷா மிகவும் மோசமாக நடித்துள்ளார்.
20 வருடங்களாக சினிமாவில் இருக்கும் திரிஷாவுக்கு நடிக்கவே தெரியவில்லை சொந்தக்குரலில் கூட பேச முடியவில்லை என்று விமர்சனம் செய்து வர இதற்கு பதிலடி கொடுத்து நடிகை திரிஷா போஸ்ட்செய்திருக்கிறார்.
அந்த பதிவில் டாக்ஸிக் (Toxic) மக்களே உங்களுக்கு எல்லாம் தூக்கமே வராதா சோசியல் மீடியாவில் அறிவுகெட்ட தனமாக மற்றவர்களை பற்றி பதிவு போடுவது தான் உங்களுக்கு வேலையா உங்களுக்காகவும் உங்கள் கூட இருபவர்களுக்காகவும் மிகவும் வருத்தப்படுகிறேன் நீங்கள் ஒரு கோழைகள் காட் பிளஸ் யூ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த பதிவு நயன்தாரா ரசிகர்களை மட்டும் அல்ல நயன்தாராவையும் தாக்கி பதிவிட்டு இருப்பதாக புகைய காரணம் நயன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் Toxic.