in

சுற்றுச்சூழல் அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்


Watch – YouTube Click

சுற்றுச்சூழல் அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக பறிமுதல் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த வியாபாரிகளும் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி வணிகல் கூட்ட பசங்க தலைவர் பாபு முத்தியால்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் சாதிக் பாஸ்டர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.

தடை செய்யப்பட்ட பொருட்கள் என கூறிக்கொண்டு அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வேறு கடைகளில் விற்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளை சமாதானப்படுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க வியாபாரிகளின் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது..


Watch – YouTube Click

What do you think?

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 6 கோடியே 84 லட்சம்

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு போராட்டம்