in

தூய இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

தூய இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

 

பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது . இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பாரம்பரிய மற்றும் சத்தான உணவுகளை தயாரித்து காட்சி படுத்தியிருந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை தூய இன்னாசியார் கல்வியல் கல்லூரியில் பாரம்பரிய மற்றும் சத்தான உணவுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாம் மறந்து போன பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சசிதீபா கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்த உணவுத் திருவிழாவில் நவதானியங்கள், பயறு வகைகள், இயற்கை விளைபொருட்களைக் கொண்டு நாவிற்கு ருசி தரும் கொலக்கட்டை, சர்க்கரை பொங்கல் , கம்பு லட்டு, கூழ், கோதுமை லட்டு, கோதுமை புட்டு மற்றும் அனைத்து காய்கறிகளால் செய்யப்பட் உணவு, பழவகைகள் உள்பட ஏராளமான உணவு வகைகளை காட்சிப் படுத்தியிருந்தனர்.

இந்த திருவிழாவில் 108 மாணவிகள் பங்கேற்று 200 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தி இருந்தனர்.

பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இந்த கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு சென்றனர்.

What do you think?

அமைச்சர் இ.பெரியசாமி முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம்