நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகியம்மன் திருக்கோவிலில் பாரம்பரியமான செவ்வாய் பொங்கல் திருவிழா ஆயிரக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் பாரம்பரியமான செவ்வாய் பொங்கல் திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது
இக்கோவிலில் பல ஆண்டுகளாக இப்பொங்கல் விழா பொங்கல் திருநாளில் அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் இதில் நடைபெறுகிறது இவ்விழாவில் இப்பகுதி ஊரைச் சேர்ந்த பக்தர்கள் பல ஊர்களிலும் பல வெளிநாடுகளில் இருந்தாலும் இவ்விழாவில் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள் இந்த ஆண்டு விழா அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது
முன்னதாக மூலவர் கண்ணுடைய நாயகி அம்மனுக்கும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் வரிசையாக புது பானையில் மஞ்சள் பூ மஞ்சள் கிழங்கு சந்தனம் பொட்டு வைத்து அம்மனை வேண்டி பொங்கல் வைத்தனர் நிறைவாக பொங்கல் பொங்கி வந்தவுடன் குலவை இட்டு கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தனர் இவ்விழாவில் சுற்றுவட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்