in

குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரியின் டயர் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்

குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரியின் டயர் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்

 

மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரியின் டயர் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்; குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு.

மதுரை லட்சுமிபுரம் பகுதியில் கடந்த ஒரு வருட காலத்திற்க்கும் மேலாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சாலையின் நடுவே சரிவர மூடாமல் உள்ளதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாக வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற சரக்கு லாரியின் டயர் சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து அவ்வழியாக பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்காண பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் லாரி சாலையில் சிக்கிக் கொண்டதால் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் அப்ப சாலையை கடந்து செல்வதற்கு செய்வதறியாமல் நீண்ட நேரம் தவித்து நின்றனர்.

What do you think?

தாபல் சேவையை வழங்கும் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூட ரயில்வே நிர்வாகம் முயற்சி

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்