in

போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் சோதனை


Watch – YouTube Click

போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் சோதனை

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் சோதனை – இருவருக்கும் வாக்குவாதம்- அபராதம் வசூலிக்காமல் அறிவுரை

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விதிகளை மீறும் பேருந்துகள் மற்றும் ஏர்ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகளை சோதனை நடத்தினர்.

பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் நிற்ககூடிய பகுதியில் அரசு புறநகர் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்ததால் அரசு பேருந்து ஓட்டுநருக்கு அறிவுரை கூறி பேருந்து எடுக்க சொல்ல தெரிவித்தனர்.

மேலும் நகர பேருந்தில் ஏர் ஹாரன் பயன்படுத்தியது சோதனையில் கண்டுபிடித்தனர். ஓட்டுநரிடம் ஏர்ஹாரன் பயன்படுத்தக்கூடாது உடனடியாக அதனை பேருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

கடந்த சில நாட்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பேருந்தில் பயணம் மேற்கொள்வதில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

சோதனையில் ஈடுபட்ட கண்டோன்மென்ட் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆரோக்கியராஜ் இதுவரை திருச்சியில் போக்குவரத்து விதிகளை மீறி அரசு பேருந்துகள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்துகள் ஏர்ஹாரன் பயன்படுத்துவார்களுக்கு அறிவுரை கொடுத்து உடனடியாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகிறோம் என்றார்.

அதற்குள் போக்குவரத்து ஊழியர்களும் உயர் அதிகாரிகளும் போக்குவரத்து காவலர்களை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேண்டுமென்றே சோதனை செய்து அபராதம் போடுகிறீர்களா என்று குரல் எழுப்பினர். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை போக்குவரத்து காவலர்கள் குறிப்பிட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நகராட்சி துவக்கப்பள்ளியில் ஆபத்தான முறையில் இடிந்து விழுந்த கிணறு

மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் நேரடி ஆய்வு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு