சிகிச்சை… குழந்தைகளுக்கு உதவி நடிகர் கார்த்தி
சிவகுமாரின் மகன்கள் நடிப்பை தாண்டி சமூக சேவையும் செய்து வருகின்றனர். ‘நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவாசாயி…யாக நடித்தார்.
அந்த படத்தின் ஹிட்..டுக்கு பிறகு விவாசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி இயற்கை விவசாயம் செய்யும் விவாசாயிகளுக்கு ஆண்டுதோறும் 1லட்சம் மற்றும் விருதுகள் வழங்கிவருகிறார்.
அறக்கட்டளை..க்கு சூர்யா 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். நடிகர் கார்த்தி இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலி மையோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு உதவி தேவை என்பதை அறிந்த கார்த்தி, படுக்கை வசதி இல்லாமல் கஷ்டப்படும் 35 குழந்தைகளுக்கு பெட் வாங்கி கொடுத்திருக்கிறார் குழந்தைகள் மகிழ்ச்சியோடு கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.