in

பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆர்ப்பாட்டம்

பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் வலியுறுத்தி ஆதியன் பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.

இவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு பல்வேறு கட்ட மனுக்களை அளித்தும் எந்தவித பலனும் இல்லை என வலியுறுத்தி இன்று திருத்துறைப்பூண்டி நகர் பகுதிக்கு உட்பட்ட கழுவமுள்ளி ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த ஆதியன் பழங்குடியினர் மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்களும் குழந்தைகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக தமிழக அரசு மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் சான்றிதழை தங்களுக்கு உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

What do you think?

சூரியனார் கோயில் மூலவரான சிவ சூரிய பெருமான் நவகிரகங்களுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்

திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி