in

கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகர கழகம் சார்பில் மரியாதை


Watch – YouTube Click

கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளைமுன்னிட்டு திமுக நகர கழகம் சார்பில் மரியாதை

திருத்துறைப்பூண்டியில் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகர கழகம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே கலைஞரின் திரு உருவ படத்திற்கு திமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தொடர்ந்து திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் உள்ள பாரதமாதா முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது

அதேபோன்று நாகை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு தொமுச சார்பில் தொழிலாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சியில் துப்புரவு பணியாளராக
பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மதிய உணவாக அசைவ பிரியாணி வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

இமயமலையில் இருக்கும் ரஜினி கொடுத்த கூலி படத்தின் update

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அறிவுரை