in

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி 

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி 

 

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னன் பந்தல்
இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக, திமுக, மதிமுக, அ.ம
முக ,மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தனித்தனியே மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ். திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் இதே போல் மதிமுக மாநில இணை பொது செயலாளர் முருகன் அம முக மாவட்ட தலைவர் பாரிவள்ளல் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தமிழ் அமைப்புகள் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

What do you think?

“பராசக்தி” டைட்டில்…லை மாற்ற வில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்

திருக்கடையூரில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த்