சுனாமி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டு கடலில் மலர்களை தூவி மரியாதை
நாகையில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் சுனாமி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டு கடலில் மலர்களை தூவி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
2004 டிசம்பர் 26 ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் நாகை மாவட்டம் பெரும் சீரழிவு சந்தித்தது உயிரிழப்பு மற்றும் பொருளாதார பேரழிவில் உலக அளவில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றது.
இந்த நிலையில் சுனாமி தாக்கி 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் நாகை மாவட்ட திமுக சார்பில் சுனாமி நினைவு மௌன ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திரளான திமுகவினர் பொதுமக்கள் பழைய பேருந்து நிலையம் கடைத்தெரு பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆரிய நாட்டுத் தெரு பகுதியில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு வந்தடைந்தனர்.
அங்கு உயிரிழந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கடற்கரைக்கு ஊர்வரலமாக சென்று கடலில் மலர்களை தூவி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.