திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் ரத உற்சவம்
எட்டாம் நாள் ரத உற்சவம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ரத உற்சவம் நடைபெற்றது.
ரத உற்சவத்தை முன்னிட்டு அதி காலை நேரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவத்தாயார் திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நெய்வேத்தியங்களுக்கு பின் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் வடம் பிடிக்க தாயாரின் ரத உற்சவம் கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாயாரின் ரத உற்சவத்தை கண்டு வழிபட்டனர்.