in

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது..


Watch – YouTube Click

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது..

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்கள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவில் உரை ஆற்றினார்..

இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

திருச்சியில் குடிநீர் விநியோகத்திற்கு மூன்று இடங்களில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி திறப்பு, 110 கோடியில் மருத்துவமனைகளில் திட்டம், ஜி கார்னர் பகுதியில் பழுதடைந்த பாலம் சீரமைப்பு, 100 Mld குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட 20க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் பணிகள் இரண்டு மாதத்தில் முடிந்து விடும். முழுமையாக பணிகள் முடிந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் திறக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் தேர்தல் முடிந்த பிறகு திறக்கும் வாய்ப்பு உள்ளது.புதிய பஸ் ஸ்டாண்டை முதல்வர் திறந்து வைப்பார். லோக்சபா தேர்தலுக்கான தகுதி பங்கீடு சுமூகமாக நடக்கிறது. திமுக தலைவரும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசி தொகுதி பங்கீடு பற்றி முடிவெடுக்கின்றனர்.

திருச்சி தொகுதி யாருக்கு என்பது பற்றி தலைவர் தான் சொல்ல வேண்டும். மீண்டும் திருநாவுக்கரசர் போட்டியிடுவது பற்றி அந்த கட்சியினர் தான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் நெருக்கமாகவும் தொடர்ந்து பயணிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்தக் கட்சியினரும் திருச்சியில் கூட்டம் நடத்தி பேச உள்ளனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது பற்றி விமர்சனத்திற்கு ஒன்றுமில்லை.

தலைவர் எதை செய்தாலும் சரியாகத்தான் செய்வார். தோழமைக் கட்சியினர் யாரையும் விட்டுவிடாமல் அனுசரித்து பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கிட இன்னும் முடியவில்லை அது முடிந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். அந்தக் கட்சியினர் சொல்ல வேண்டியதை நான் எப்படி சொல்ல முடியும் இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மாணவர்கள் மீது கண்டைனர் லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பேட்டி