in

திமுக கூட்டணியில் “கை” மாறிய திருச்சி


Watch – YouTube Click

திமுக கூட்டணியில் “கை” மாறிய திருச்சி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் புதுச்சேரி சேர்த்து 10 தொகுதிகள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.

அதில் எந்தெந்த தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ளன என இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவள்ளூர் தனி தொகுதி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்றும், அனைத்தும் எங்களுக்கு சாதகமான தொகுதிகள் தான். இந்தமுறை திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

இந்த லிஸ்டில் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு இருந்த ஆரணி, தேனி, திருச்சி மக்களவை தொகுதிகளுக்கு பதிலாக கடந்த முறை திமுக வென்று இருந்த கடலூர், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய மக்களவை தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் திருச்சியில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசு வெற்றி பெற்று இருந்தார் என்றும் ஆனால் இந்த முறை திருச்சி ‘கை’ மாறி இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா

52-க்கு மேற்பட்ட சமூக நல அமைப்பினருடன் சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆலோசனை