in

திருச்சி மலைக்கோட்டை கோயில் கல்யாண விநாயகர் சன்னதி, பிரசாத ஸ்டால் கழிவு நீரால் சூழ்ந்து துர்நாற்றம்

திருச்சி மலைக்கோட்டை கோயில் கல்யாண விநாயகர் சன்னதி, பிரசாத ஸ்டால் கழிவு நீரால் சூழ்ந்து துர்நாற்றம்

திருச்சி மலைக்கோட்டைபகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் டேங்க்லிருந்து தண்ணீர் திடீரென திறக்கப்பட்டு, முறையாக வெளியேற்றப்படாமல் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீரும் குடிநீரும் ஒன்றாகக்கலந்து தற்போது மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் பிரகாரம் முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் முதல் யானை நிறுத்துமிடம், தேவஸ்தான பிரசாத ஸ்டால், கல்யாண விநாயகர் சன்னதி மற்றும் சுவாமி வாகன மண்டபம் என அனைத்து இடங்களிலும் கழிவு நீர் சூழ்ந்தது.

கழிவுநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் கோவில் பிரகாரங்களில் துர்நாற்றம் வீசிவருவதால் மலைக்கோட்டை தாயுமானசுவாமி மற்றும் உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கச்செல்லும் பக்தர்கள் மற்றும் மலைக்கோட்டை மாடவீதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த முறையற்ற செயலால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் திருச்சி மாநகரில் மழை பெய்து வருவதால் கூடுதலாக மழை நீரும் சேர்ந்து வந்துள்ளது உள்வீதியில் காலை போடும் பணி உள்ளிட்டவைகள் மேற்கொண்டு வருவதால் மேலும் கழிவுநீர் செல்லும் பாதைகளும் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்

What do you think?

சிறைத்துறை ஏட்டு சஸ்பெண்ட் – மூன்று காவலர்களுக்கு மெமோ பொறுப்பு டிஐஜி நடவடிக்கை

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி காட்டூர் ஆயில் மில்லில் நடைபெற்ற சிலை திறப்பு