in

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் 10 நாட்களில் மூடப்படுகிறது- அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் 10 நாட்களில் மூடப்படுகிறது- அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் 10 நாட்களில் மூடப்படுகிறது. புதிய பாலப்பணிகள் துவங்க உள்ளதால் நடவடிக்கை அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள மிக முக்கியமான பாலம் விரைவில் மூடப்படுகிறது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு அருகே புதிய பாலம் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய பாலம் கட்டபட உள்ளதால் விரைவில் மூடப்பட பாலம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ரூ138 கோடியில் இந்த பாலம் கட்டப்பட்ட உள்ளது . முதற்கட்ட பணிகள் ரூ16 கோடியில் துவங்கப்பட உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசியபோது…..
திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் இடிக்கப்பட உள்ளது. விரைவில் ரயில்வே நிர்வாக பகுதியில் பணிகள் துவங்கப்பட உள்ளது.

ரயில்வே பகுதி ரயில்வே துறையினர் கட்டி தருவார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை மாநகருக்குள் இணைக்கும் முக்கியமான பாலம்.இதனை மூடினால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அனைத்து கட்ட முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க துவங்கியுள்ளது.

இன்னும் பத்து நாட்களில் இந்த பழைய ஜங்ஷன் பாலம் மூடப்படும். அதற்கான அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் நேரு செய்தியாளிர்களிடம் தெரிவித்தார்.

What do you think?

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பலர் கைது

பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் திருச்சி பெரியார் கல்லூரி புறக்கணிப்பு