in

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்


Watch – YouTube Click

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

 

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் போராட்டம்.

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட்டு மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு பிரதமர் மோடி ஐயா நிறைவேற்றத்தை கண்டித்தும், விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமலும், உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்தனர்.

இது ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சி அல்லவா.. விவசாயிகளுக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முகொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி நீரில் மூழ்கியவாறு கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப்பிரவேசம் தடை விதிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

A cancer awareness program was held at Meenakshi Mission Hospital