in

பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் திருச்சி பெரியார் கல்லூரி புறக்கணிப்பு

பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் திருச்சி பெரியார் கல்லூரி புறக்கணிப்பு

 

மாணவர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம்

தந்தை பெரியார் அரசு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அமர்ந்து மாணவர்கள் போராட்டம்..

பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கிரிக்கெட் போட்டி பட்டியலில் கல்லூரி பெயர் இடம் பெறவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு…

அணைத்து கல்லூரிகள் பங்குபெரும் கிரிக்கெட் போட்டி பெயர் பட்டியலில் தந்தை பெரியார் கல்லூரி பெயர் இடம் பெறவில்லை எனவும் குற்றச்சாட்டு…

தற்போது நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரியார் கல்லூரி முதல் பரிசை பெற்றது.

இந்த நிலையில் தனியார் கல்லூரிகளை ஊக்கிவிக்கும் வகையில் அரசு கல்லூரிகள் புறக்கணிப்பு.

கூகுள் மீட் தேர்வு கூட்டத்தில் தாமதமாக பெரியார் கல்லூரி கலந்து கொண்டதால் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை.

வேண்டுமென்றே அரசு கல்லூரிகள் புறக்கணிப்பு என கூறி, பெரியார் கல்லூரி மாணவர்கள் தொடரும் தர்ணா போராட்டம்…

உடனடியாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலையிட்டு பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டியில் அரசு கல்லூரிகள் புறக்கணிக்கப்பட்டதை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கிரிக்கெட் போட்டியில் அரசு கல்லூரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

What do you think?

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் 10 நாட்களில் மூடப்படுகிறது- அமைச்சர் நேரு பேட்டி

திருச்சியில் சத்துணவு முட்டை விற்பனை சோதனையில் 960 முட்டைகள் பறிமுதல் – 4 பேர் கைது