in

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

 

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு, நேற்று மறையூர் ரயில்வே கேட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பகுதியில் அமைந்துள்ள தானியங்கி கருவியினை, ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 24 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் திரு அன்பழகன் இன்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மயிலாடுதுறை அருகே மறையூர் ரயில்வே கேட் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ரயில்வே கேட் திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தானியங்கி கருவியை அப்போது அவர் ஆய்வு செய்தார் – தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

What do you think?

அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம்

பாஜக அதிமுக நாதக மூவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் அர்ஜுன் சம்பத் பேட்டி