திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவர் நம்பெருமாள், அரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை பிரபந்திற்காக, மாந்துளிர் நிற பட்டு அணிந்து சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய்;
நெற்றி சரம், சூர்ய – சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம் – தொங்கல் பதக்கம்; ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம் தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம், காசு மாலை; அரைச் சலங்கை;
பின்புறம் – புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.