in , , , ,

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து பத்துதாம் நாள் உற்சவம் மோகினி அலங்காரம்


Watch – YouTube Click

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து பத்துதாம் நாள் உற்சவம் மோகினி அலங்காரம்

 

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10ம் நாள் திருவிழா – நம்பெருமாள் ரத்தின கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

108வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீர்ங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என 21நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 30ம்தேதி தொடங்கிய திருநெடுந்தாண்டகத்தையடுத்து, பகல்பத்து திருநாளில் நம்பெருமாள்(உற்சவர்) தினமும் வெவ்வேரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார்.

பகல்பத்தின் கடைசிநாளான இன்று நம்பெருமாள் அசுரர்களிடத்திலிருந்து தேவர்களைக்காக்க மோகினியாக உருவெடுத்தார், இதனை உணர்த்தும்வகையில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளிபல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் உலாவந்து, அரையர்கள் சேவை எனப்படும் பாசுரங்களைக் கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு பொதுஜனசேவை சாதித்துவருகிறார். நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றபடி சேவித்துவருகின்றனர்.

முக்கிய திருநாளான வைகுந்த ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மேனேஜர் வீட்டை தரைமட்டமாக்கிய நடிகை கௌதமி