in

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் டி ஆர் பி ராஜா பேட்டி

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் டி ஆர் பி ராஜா பேட்டி

 

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விவசாயிகள் ஒப்புதலுடன் தான் வளர்ச்சி பணிகளுக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி.

திருவாரூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கான இடத்தை கொரடாச்சேரி அருகே கரையாபாலையூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோரிடம் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்ததாவது…

தமிழ்நாட்டில் இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய் அளவை தாண்டி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலான வளர்ச்சியை தரும் நோக்கில் தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

படித்த இளைஞர்களுக்கும் தாய்மார்களுக்கும் வேலை தருவதை முக்கியமாக கொண்டுள்ளார். அமெரிக்க சுற்று பயணத்தில் மூன்று அல்லது நான்கு முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விவசாயிகள் ஒப்புதலுடன் வளர்ச்சி பணிகளுக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுக்க பட்டு வருகிறது என்றார்.

What do you think?

பழனி திருக்கோயிலின் உண்டியல்கள் காணிக்கை வரவு ரூ.2.78 கோடியை தாண்டியது

தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்