டிடிஎச் வாசன் குப்பை…கழுவி… ஊற்றும் மஞ்சள் வீரன் இயக்குனர் செல்லம்
டிடிஎச் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்லம்.
TTF வாசன் ஒரு குப்பை அவரை வைத்து எப்படி படம் எடுப்பது என்று பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் .
TTF சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரிடம் சொல்லாமல் பத்திரிகையாளர்களை அழைத்து TTF வாசனை இந்த படத்திலிருந்து நீக்குகிறோம் என்று இயக்குனர் செல்லம் கூறியுள்ளார்.
ஏன் அவரை நீக்குனீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தேவையில்லாத பொருட்களை குப்பையில் தான் போடுவோம் அதேபோல TTF ஒரு குப்பை அவரை வைத்து இருந்தால் நம்மை சுற்றி நாற்றம் அடிக்கும் என்று கூறியுள்ளார்.
இவருக்கு எதிராக TTF …வாசனும் இரண்டு மீட்டர் அப்படின்னு பெயர் வைத்து ஒரு நீளமான வீடியோவை போட்டு கலாய்த்திருக்கிறார். இயக்குனறோ என்னை வைத்து போட்ட வீடியோ…வை இதுவரை 11 லட்சம் பேர் பார்த்திருகாங்க .என்னால் அவரும் மூன்று லட்சம் சம்பாதித்து விட்டார்.
நான் ஒரு பிச்சைக்காரன் எனக்கு இவரை போல தனியாக சேனல் எதுவும் கிடையாது. மஞ்சள் வீரன் படத்திற்கு நாங்கள் போன வருடம் ஜூன் 29ஆம் தேதி பூஜை போட்டோம் அந்த படத்தில் ஒரு பைக் Wheeling காட்சி இருக்கிறது அதனால் தான் அவரை நாங்கள் போட்டோம் ஆனால் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டு இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்.
அவரை நாங்கள் ஸ்ரீதர் மாஸ்டரிடம் பிராக்டிஸ் அனுப்பி இருந்தோம் 11 மணி கிளாஸ்க்கு ஒரு மணிக்கு. செப்டம்பர் மாதம் ஷூட் வைத்த போது யாரிடமும் சொல்லாமல் அவர் மகாராஷ்டிரா சென்று விட்டார் கேட்டதற்கு நான் கோவையில் இருந்து காஷ்மீருக்கு நிற்காமலேயே பைக் ஓட்டுவேன். நான் யாருன்னு காட்டவா என்னையே கேள்வி கேட்கிறீர்கள் அப்படின்னு கோபப்பட்டார் அதன் பிறகு ஜெயிலுக்கு சென்று விட்டார் .
சரி வந்ததுக்கு அப்புறம் நடிப்பார் என்று டிசம்பர் மாதம் வரை நான் வெயிட் பண்ணினேன் அப்படியே ஏப்ரல் மாதம் வரைக்கும் போயிடுச்சு ஏப்ரல் மாசம் தேர்தல் பிரச்சாரம் பண்ண போயிட்டாரு இத்தனை மாசம் வெயிட் பண்ணதால தயாரிப்பாளர்களும் போயிட்டாங்க நான் ஆரம்பிச்ச படத்தால எனக்கு தான் நஷ்டம் அப்படின்னு கோபமாக இயக்குனர் செல்லம் கூறியுள்ளார்.