in

பாஜக கூட்டணியில் அமமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்த டிடிவி


Watch – YouTube Click

பாஜக கூட்டணியில் அமமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்த டிடிவி

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது.

இதனால் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் கடந்த சில மாதங்களாக பேசி கொண்டிருந்தோம். தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவிற்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது பிரச்சனை கிடையாது. எங்களது தேவை என்ன என்பது பாஜகவுக்கு தெரியும். வரும் மக்களவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக பாஜக தான் தேவை. நரேந்திர மோடி தான் மூன்றாவது முறை பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

எனவே எந்த உறுத்தலும் இல்லாமல் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைகிறது அமமுக என தெரிவித்தார். ஏற்கனவே நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சி இணைந்த நிலையில், தற்போது அமகவும் இணைந்துள்ளது. இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவும் பாஜகவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

80 வயது மூதாட்டிகளுகு மகளிர் தின விழா கொண்டாடிய பொதுமக்கள்

போதைப்பொருள் விற்பனையை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்