டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தொடர்ந்து அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழ்நிலையில் அதற்கான டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்