தொண்டர்களிடையே கொந்தளிப்பு… தமிழக வெற்றி கழகத்திற்கு மீண்டும் 5 நிபந்தனைகள்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டில் நடக்க விருப்பதை ஓட்டி மாநாட்டு காண பணிகள் துரிதமாக கட்சி குழுவினரால் செயல்படுத்தப்படுகிறது.
234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு குழுவையும் நியமிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மற்ற பணிகளுக்காக தன்னார்வல குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் போது நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க தனியார் பாதுகாப்பு படைகளும் தயார் நிலையில் உள்ளது. ஒரு பக்கம் மாநாட்டு பணிகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
அவற்றுக்கு தக்க பதிலை கொடுத்த தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளரிடம் மேலும் 17 கேள்விகலூக்கு பதில் அள்ளிக்க நோட்டீஸ் அனுப்பட்டது.
அப்பாடான்னு மூச்சி விட்ட கழகத்திடம் தற்போது மேலும் ஐந்து நிபதனைகள் விதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவதாக அறிவித்திருக்கிறீர்கள் அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்தும் இடத்தை இன்னும் நீங்கள் உறுதி செய்யவில்லை.
உள்ளூர் தொண்டர்கள் வந்தால் அவர்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்து அதற்கான வரைபடங்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே பட்டியலிட வேண்டும் என உள்ளிட்ட ஐந்து கேள்விகள் கேட்டு தமிழக வெற்றி கழகத்தினருக்கு போலீஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மாநாடு நெருங்கும் நேரத்தில் மேலும் நிபந்தனைகள் விதித்திருபது அரசியல் காழ்புணர்சியை காட்டுவதாக கட்சியினர் இடையே சலசலப்பையும் தொண்டர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.