in

கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்ததாக இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்ததாக இருவர் கைது

 

திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பணியகத்தின் காவல் ஆய்வாளர் கதிரேசன் தனது குழுவினருடன் மணப்பாறை மறவனூர் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தியபோது தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது. அவர்கள் ராம்ஜி நகரைச் சேர்ந்த விக்னேஷ் 20 மற்றும் தனுஷ் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து பையில் 1.500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் விக்னேஷ் கடந்த நான்கு மாதமாக தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார்.

இவர்கள் மீது துறையூர் மதுவிலக்கு அமலாக்க பணியகத்தினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

What do you think?

நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடைகளை தீபாவளிக்கு வாங்கி பரிசளித்த சமூக ஆர்வலர்

மீன் உற்பத்தியினை அதிகரித்திட 3 வகையான மீன்குஞ்சுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் குளத்தில் விட்டார்