in

திண்டிவனத்தில் ஒரே இரவில் இரண்டு பைக்குகள் திருட்டு

திண்டிவனத்தில் ஒரே இரவில் இரண்டு பைக்குகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாரதிதாசன் பேட்டை சேர்ந்த காண்டீபன் மகன் கார் ஓட்டுநர் குமார் (44) இவர் நேற்று இரவு 10 மணி அளவில் திண்டிவனம் கிடங்கல்-2 சென்னை மெயின் ரோடு மகிழ்ச்சி இல்லத்தில் பொறியாளர் பாஸ்கரன் என்பவரின் வீட்டிற்கு சென்று அருகில் தனது பல்சர் 125 புதிய பைக்கை நிறுத்தி சென்னைக்கு பாஸ்கரை காரில் அழைத்து வர சென்றுள்ளார்.

வந்து பார்த்த போது அங்கிருந்த பைக் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் காவேரிப்பாக்கம் இளங்கோவன் மகன் பாண்டியன் (25) இவர் காவேரிப்பாக்கம் எல்லைச்சந்து தெருவில் உள்ள தனது வீட்டின் அருகே பல்சர் பைக்கை நிறுத்தி சென்றுள்ளார். இந்நிலையில் காலையில் வந்து பார்க்கும் போது பைக் அங்கிருந்து காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இரு பைக்குகள் திருடும் சி.சி.டி.வி கட்சிகள் சமுகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவது வழக்கமாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் பைக் திருடர்களையும் குறிப்பாக விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

தமிழ்நாட்டில் தான் அதிக வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெற்று வருவதாக ஆலம்பூண்டியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு.

சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்