திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் பழுதை சரிசெய்யும் பொழுது ஒப்பந்த ஊழியர் இருவர் பலி
திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
மற்றொரு நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொருவர் தரையியில் உதவிக்காக மின்னழுத்த கோபுரத்தை பிடித்துக்கொண்டிருந்த. போது ஒப்பந்த ஊழியர் மாணிக்கமும் உயிரிழந்தார். இருவரும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் என்ற தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.