in

முசிறி அருகே குடிபோதையில் வாலிபரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது

முசிறி அருகே குடிபோதையில் வாலிபரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே சீத்தப்பட்டி அரசு டாஸ்மார்க் கடை அருகே கடந்த மாதம் 27-ந் தேதி பாலத்தின் அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாரதி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தசம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கஸ்தூரிபாய் புரம், கோவில்தெரு காமாட்சி மகன் பாலகிருஷ்ணன் (24) என தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணனின் நண்பர் ரமேஷ் (38) ஆகிய இருவரும் பர்னிச்சர் வேலை செய்வதற்காக கரூர் அருகே உள்ள மோகனூரில் தங்கி வேலை செய்து வந்தனர். நண்பர்கள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் மோகனூர் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றும் மது அருந்தி உள்ளனர். அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரிடமும் சுவாரசியமாக பேசி கொண்டனர்.

இந்தநிலையில் பெரியகுளம் பகுதியில் தங்களுக்கு யாரை தெரியும் என அந்த கும்பல் கேட்டதற்கு நண்பர்கள் இருவரும் அந்த கும்பலுக்கு எதிரானவர்களின் நண்பர்களாக பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் இருந்ததை கண்ட அந்த கும்பல் பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் இருவரையும் தாங்கள் தங்கி இருந்த ஒருவந்தூர்புத்தூர் இடத்திற்கு மது அருந்துவதற்காக கூட்டி சென்றனர். அங்கு சென்ற அந்த கும்பல் பாலகிருஷ்ணன், ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் பாலத்தின் கீழ் சென்று மயங்கி விழுந்து உள்ளார்.

ரமேஷ் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனங்களின் உதவியுடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் பாலத்தின் அடியில் கிடந்த பாலகிருஷ்ணன் இறந்து போனது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து ரமேஷ் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குடிபோதையில் பாலகிருஷ்ணனை அடித்து கொன்ற கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா மேற்குவார்பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த தாசில்ராஜா மகன் சதீஷ்குமார் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் புவனேஸ்வரன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

What do you think?

ஆண்டுக்கு மூன்று லட்சம் பணம் விதைகள் விதைக்க இலக்கு – ஓய்வு பெற்ற பெல் உதவி பொது மேலாளரின் முயற்சி

மயிலம் வடக்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்