இரு சக்கர வாகன திருடன் – சோதனையில் பிடித்து சிறையிலடைத்த காவல் துறையினர் – பொதுமக்கள் பாராட்டு
குத்தாலத்தை சேர்ந்த இரு சக்கர வாகன திருடர் 46 வயதை சேர்ந்து முத்து என்பவரிடம், 10 – க்கு மேற்பட்ட திருட்டு வானங்களை கை பற்றி குற்றவாளியை சிறையிலடைத்த குத்தாலம் காவல் துறையினர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அஞ்சலாற்று கரையில் காவல் துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு இரு சக்கர வாகனம், காவலர்களை கண்டவுடன், வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி உள்ளார்.
இதனால், சந்தேகமுற்ற குத்தாலம் காவல் துறையில் இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் அந்த இரு சக்கர வாகனத்தை விரட்டி சென்று பிடித்து உள்ளனர். அப்போது அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வண்டி என தெரிந்ததால், அவரை காவல் துறையினர் விசாரித்த போது, அவர் சென்னை, வில்லிவாக்கத்தில் ரெட் கில்ஸ் பகுதியில் வசிக்கும் கந்தசாமி மகன் முத்து (வயது 46) என்றும், தற்போது குத்தாலம் வியாபார செட்டி தெருவில் அருள் காம்ளெக்ஸில் வசிப்பதாகவும் கூறி உள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவலர்கள் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது, , எனக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல நண்பர்கள் உள்ளனர்.
அவர்களின் உதவியோடு இந்த மாவட்டத்தில் வண்டிகளை திருடி சென்னைக்கு கொண்டு சென்று விடுவேன் எனக் கூறி உள்ளார். அதனடிப்படையில் அந்த திருடனை விசாரித்த போது அவரிடமிருந்து 10 – க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் கைபற்றி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.