in

உதயநிதி திகார் சிறைக்கு செல்வார் பாஜக சிறுபான்மையினை செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டி


Watch – YouTube Click

சித்தாமூர் ஒன்றியத்தில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி -கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் பகதூர்சேட் ஏற்பாட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவை கொண்டாடும் வகையில் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் உள்ள பறவைகள் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தேசிய சிறுபான்மையினர் செயலாளர் வேலூர் இப்ராஹிம்,சிறப்பு விருந்தினராக கொண்டு முதியோர் இல்லத்தில் உள்ளஅனைவருக்கும் பிரியாணி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளிடம் தேசிய சிறுபான்மையினை செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியது:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு மூன்றாவது முறையாக ஆட்சி என்பது பாரத மக்களுக்கு மட்டுமல்ல உலக தலைவர்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய நல்ல தருணமாக இருக்கிறது.நாளைய மறுதினம் பதிவேற்பு விழாவில் அனைத்து மதத்தினரும்,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.பாரதம் உலகின் குருவாக மாறிக் கொண்டிருக்கிறது.பாரதப் பிரதமர் மூன்றாவது முறையாக பங்கேற்கும் நிகழ்வை தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்தோஷமாக கொண்டாடி மசூதி மற்றும் திருக்கோயிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து வருகிறோம்.

இனி வரும் நாட்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஊழல்களை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய ஊழல் அமைச்சர்களை சிறைக்கு தள்ளக்கூடிய நாட்களாக இருக்கும்,உதயநிதி போன்றவர்கள் எல்லாம் துணை முதல்வர் கனவை எதிர்பார்த்துக் கொண்ட நிலையில் போதை பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக செய்திகள் கூறிக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் துணை முதல் ஆவதற்கு முன்னதாக திகார் சிறைக்கு செல்வார்.பிரதமருடைய மூன்றாவது முறை பாரதிய ஜனதாவின் ஆட்சி என்பது நிஜமான, ஒரு உண்மையான வளர்ச்சிக்கான பாரதத்தை இனி தான் சந்திக்கப் போகிறது.அதில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை குறிப்பாக தி.மு.க வினருக்கும்,திமுக கூட்டணியின் நயவஞ்சகர்களுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை எடுத்துச் சொல்கிறோம்.என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இன்றைய முக்கிய செய்திகள் 07.06.2024