கடலூர் மாவட்டத்தில் சூறவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்
கடலூர் மாவட்டத்தில், சூறவளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் திமுக கூட்டணி தலைவர் தொல் திருமாவளவனுக்கு பானை சின்னத்திலும் அதே போல் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் பஸ் நிலையம் முன்பாக கடலூர் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் DR. விஷ்ணுபிரசாத் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என சூறாவளி சுற்றுபயணம்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் இருந்தபடி தேர்த்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவர் மத்திய அரசு கோவிட் முன்வைத்து யாரும் வெளியில் வரக்கூடாது என்று உருவாக்கினார்கள் கோவிட் இல் இருந்து மக்கள் முழுமை பெற தடுப்பூசி அவசியம் என்பதை மக்களிடம் எடுத்து செல்ல முதல்வர் அவர்கள் தானே கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை, வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியவர் இந்தியாவிலேயே நம் முதல்வர் என்றும் பெருமை பட கூறினார்.
கோவிட் பிரச்சனையின்போது மக்கள் வெளியே வந்து விளக்கு ஏற்றுங்கள் விளக்கு பிடியுங்கள் தட்டுங்கள் கொரொனா வைரஸ் போயி விடும் என்று கூறினார்கள்.
இதே போல் 2019 இல் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர் தான் நம் முதல்வர் என்றும். முதல்வர் யார் காலையும் பிடித்து முதல்வராக வரவில்லை மக்களை சந்தித்து மக்களால் தேர்தெடுக்கபட்டவர் தான் நம்முதல்வர் என்றும் பாதம் தாங்கி வந்தவர் பழனிசாமி என கூறினார்.
பொதுமக்கள் அனைவரும் நம் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.