in

உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர்…. எதிர்பாருங்கள்.*

உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர்…. எதிர்பாருங்கள்.*

மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி.

மதுரைமாவட்ட அளவில் நடைபெற்ற கல்வி கடன் முகாம் அமைச்சர் மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்பு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட அளவிலான கல்விக் கடன் சிறப்பு முகம் இன்று நடைபெற்றது

அமைச்சர் மூர்த்தி அவர்கள் முகாமை தொடங்கி வைத்து 134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தசக்திவேல் அவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பிரசாந்த் துக்காராம் நாயக் அவர்கள், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் பியுலா ஜெயஸ்ரீ அவர்கள் உட்பட பல்வேறு முன்னணி வங்கிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது வரி எய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம்.அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வே எடுத்து தொழில் வரி ஏய்ப்பு செய்வர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கிறோம்.

போலியாக, தொழில் செய்வதாக சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களை கண்டறிந்து வருகிறோம்.

கடந்த ஆண்டை விட 4000கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வணிகவரித்துறையில் 1,42ஆயிரம் கோடி இலக்கு வைத்துள்ளோம்.

நியாயமாக நேர்மையாக தொழில் செய்ய வேண்டும்.

பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டியை அரசுக்கு நேர்மையான முறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

What do you think?

பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை நடைபெற்றது

மணப்பாறை அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.