பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (07.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைந்தார். இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் … கடுமையான உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் அவர் உடல் நிலையில் என்ன கோளாறு என்று மட்டும் வெளியில் அறிவிக்கவில்லை. இவர் 2021 – 22 ஆம் ஆண்டு தொடரில் இங்கிலாந்து தோற்றத்தை அடுத்து உதவியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ஆனால் உடல் நல கோளாறு காரணமாக அவரால் தொடர்ந்து பயிற்சி அளிக்க முடியாமல் போனது 55 வயதில் மறைந்த இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கிரஹாம் தோர்ப் 1993 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இங்கலாந்து அணிகாக 100 டெஸ்டில் விளையாடி 6744 ரன்கள் எடுத்துள்ளார் . இடது கை பேட்ஸ்மேனான இவர் 17 ஆண்டுகள் விளையாடி 27 ஆயிரத்து 993 ரன்கள் அடித்துள்ளார். சிகிச்சை பலன் இன்றி நேற்று மறைந்த கிரிக்கெட் வீரரின் மறைவு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியதை சோகத்தில் ஆழ்தியது
இனவெறி காரணமாக மூன்று இளம் பெண்களின் சோகமான மறைவுக்கு நீதி கேட்டு வலதுசாரிகளின் தலைமையிலான போராட்டங்கள் பல நகரங்களில் இன்னும் தொடர்வதால், அமைதியின்றி, நாடு முழுவதும் தத்தளிகிறது, .சுமார் 400 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். யுனைடெட் கிங்டமில் கலவரங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் கிளர்ச்சியாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.வடக்கு இங்கிலாந்தில் உள்ள டாம்வொர்த்தில் உள்ள ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் ஏஜென்சி இந்த மாதம் சார்ன்வுட், லீசெஸ்டர்ஷயரில் ஒரு புதிய வெள்ள எச்சரிக்கை சேவையை அறிமுகப்படுத்துகிறது,வெள்ளம் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் அறிந்துகொள்ள இந்த புதிய சேவை பயனளிக்கும். வெள்ள எச்சரிக்கைகள், பொதுமக்களுக்கு அவர்களின் வீடு அல்லது வணிகத்திற்குள் வெள்ளம் ஏற்படுவதற்கான உடனடி அபாயத்தைப் பற்றி தெரிவிக்கின்றன மற்றும் மக்கள் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தகவலறிந்து முடிவுகளை எடுக்க உதவும் என்கின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் சவுத்போர்ட் பகுதியை உலுக்கிய பயங்கரமான சம்பவத்தால் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் சவுத்போர்ட்டில் உள்ளூர் தலைவர்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கலுக்கான ஈழப்பிட்டை அளிப்பதாக உறுதியளித்தார். சவுத்போர்ட் விஜயத்தின் போது, மெட்ரோ மேயர் ஸ்டீவ் ரோத்தராம், தலைமைக் காவலர் செரீனா கென்னடி மற்றும் உள்ளூர் காவல் துறை, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் மற்றும் தன்னார்வ மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் பங்கேற்றார். பிறகு பிரதமர் லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே மருத்துவமனைக்கும் சென்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் கிரீஸ் மற்றும் ருமேனியா ஆகிய இரு நாடுகளுக்கும் சுகாதார ஆய்வாளர்களை அனுப்பியது.. செம்மறி மற்றும் ஆடுகலுக்கு பிளேக் பரவுவதி தடுக்க , தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் PPR ஐ ஒழிப்பதே எங்கள் நோக்கம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ருமேனியாவை தொடர்ந்து பல்கேரியா மற்றும் பால்கன் முழுவதும் இந்த நோய் பரவம் அபாய உள்ளதாக தெரிவித்துள்ளனர்