பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (06.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். நவம்பர் 2024 தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ள தயாராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில், கருபினதவர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக கலமிரங்குவது இதுவே முதல் முறை.கமலா தேவி ஹாரிஸ் அக்டோபர் 20, 1964 அன்று கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தார். அவரது தாயார், ஷியாமளா கோபாலன் ஒரு இந்தியர் இவர் மார்பக புற்றுநோய் விஞ்ஞானி…யாக பணியாற்றுகிறார், அவரது தந்தை, டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்காவில் பிறந்தவர் ஸ்டான்போர்ட் பேராசிரியராக உள்ளார். கமலா தேவி ஹாரிஸ் ,பே ஏரியாவில் வழக்கறிஞராகத் தொடங்கி, பின்னர் 2010 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பதவியேற்றார். பிறகு, 2016ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டரானார். (SENATE)
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா திங்களன்று ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார், வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்கள் வெடித்த போது நூற்றுக்கணக்கான மக்கள் மறித்ததை எதிர்த்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுத்தது…..15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இராணுவ ஊரடங்கு உத்தரவை மீறி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு $130,000 செலுத்தியதை மறைப்பதற்காக பொய்யா… பதிவுகளை காட்டியதிற்காக டிரம்ப் மே மாதம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.மிசோரியின் குடியரசுக் கட்சியின் அட்டர்னி ஜெனரல் ஆண்ட்ரூ பெய்லி ஜூலை 3 அன்று இவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்,இந்த குற்றச்சாட்டில் நியூயார்க்கில் டொனால்ட் டிரம்ப் மீதான தண்டனையை நிறுத்துவதற்கான மிசோரி முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் திங்களன்று நிராகரித்து,
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் பிஏசி, மிச்சிகனில் வாக்காளர் தகவல் மீறல்களுக்கான விசாரணையில் உள்ளது. எலோன் மஸ்க்கின் ஆதரவுடன் ஒரு அரசியல் நடவடிக்கைக் குழு மிச்சிகனில் மாநில சட்டங்களை மீறியதற்காக விசாரணையில் உள்ளது என்று மிச்சிகன் மாநிலச் செயலர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இங்கிலாந்து உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்வதாக எலோன் மஸ்க் கூறியதை அடுத்து பிரதமருக்கும் எலோன் மஸ்க்….க்கும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. X….தளத்தின் உரிமையாளரான மஸ்க், இங்கிலாந்தில் நடக்கும் கலவரங்கள் தொடர்பாக டவுனிங் ஸ்ட்ரீட்டுடன் ஒரு குரூப்….பை தொடங்கினார், ஆன்லைன்…னில் கசியும் தவறான தகவல் அமைதியின்மையைத் தூண்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் இங்கிலாந்து பிரதமர்.
BBC ஒலிம்பிக் தொகுப்பாளர் கேபி லோகன் ,பெரிமெனோபாஸ் காரணமாக “தனது நினைவாற்றல் குறைபாட்டை குறித்து பகிர்ந்துள்ளார், கேபி லோகன், கூறியதாவது “சரியான நேரத்தில் சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்கும்” திறன் என்னை விட்டு போனதும் அந்த உணர்வு தன்னைப் பிடுங்கிக் தின்றது என்றார்.51 வயதான அவர் தனது நினைவாற்றல் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதைக் உணர்ந்த போது. ஒலிம்பிக் போன்ற நிகழ்வுகளின் போது இது மிகவும் கடினமாக இருந்தது, பிபிசி தொகுப்பாளராக பணியாற்ற நினைவுகூருதல் அவசியம். என்னால் இனி விஷயங்களை நினைவில் கொள்ள முடியவில்லை’ என்று நான் எப்போது நினைக்கத் தொடங்கினேன் என்பதை கூட என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. .”என்று வருத்ததுடன் கூறினார்.
சவுத்போர்ட்டில் குழந்தைகளுக்கான நடன வகுப்பில் ஏற்பட்ட தாக்குதலை கண்டித்து ஏழாவது நாளாக வன்முறைச் தொடர்ந்ததால், திங்கள்கிழமை மாலை இங்கிலாந்தின் பல நகரங்களில் காவல்துறை தாக்குதலை ஏற்படுத்தியது.பிளைமவுத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், “பல போலீஸ் அதிகாரிகள்” சிறு காயங்களுக்கு ஆளாகினர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,. வலதுசாரி களின் ஆர்ப்பாட்டத்தையும் எதிர் எதிர்ப்பையும் தடுக்க முயற்சித்த அதிகாரிகளை நோக்கி செங்கற்களும் பட்டாசுகளும் ஏவப்பட்டன.