in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (05.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news

சூடானின் மேற்கு டார்பூர் பிராந்தியத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் முகாமில் தங்க வைக்க பட்டவர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகலும் ஊட்டச்சத்து குறைபாடால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று உதவிக் குழு ஞாயிற்றுக்கிழமை கூறியது. அல்-ஃபஷர் நகரத்தை முற்றுகையிட்ட படைகள், நகரத்திற்கும் அருகிலுள்ள ஜம்ஜாம் முகாமிற்கும் உணவு ,மருத்துவப் பொருட்களை ஏற்றிச் சென்ற மூன்று டிரக்குகளைத் ராணுவம் தடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதனால் மக்கள் மற்றும் குழந்தைகல் கடுமையாக பாதிக்க பட்டுள்ளனர்.

வங்காளதேசத்தில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தினார். ஆனால் இதில் பாராபட்சம் இருப்பதாக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது போலீசாருக்கும் மாணவர்களும் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட பொழுது 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் மறைந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்

19 வயதான இந்தியாவை சேர்ந்த ஆதித்யா ஆனந்த் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக சேர்ந்தார். ஆனால் இவர் போலி ஆவணங்கள் ஒப்படைத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு ,இவர் மீது குற்றம் சாட்ட பட்டு விசாரணை நடத்தப்பட்டதை யடுத்து மூன்று மாத சிறை தண்டனையும் 20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்தவுடன் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து தீடிர் தாக்குதல் நடத்தினர் .200க்கும் மேற்பட்டோர் பினையகைதியாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பினையகைதிகளை விடுவிக்க கோரி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது . நேற்று பாலஸ்தீன தலைநகரில் இஸ்ரேல் போர் விமானம் வான் வழியாக சரமாரியாக குண்டுகளை பொழிய காஸா பள்ளியில் தஞ்சம் அடைந்த ஏராளமானோர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர் 18 பேர் மறைந்தனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் உலகின் அதிவேக வீராங்கனை யார் என்ற போட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற போது 8 வீராங்கனைகள் களமிறங்கினர் .100 மீட்டர் ஓட்டத்தில் பங்குபெற்ற போட்டியாலர்களில் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் மின்னல் வேகத்தில் ஓடி தங்க பதக்கத்தை வென்றார் செயின்ட் லூசியாவின் ஜூலியன் ஆல்ஃபிரட் இவர் 10 .72 வினாடிகளில் இலக்கை பிடித்து பிரமிப்பை ஏற்படுத்தினர்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள இந்திய தூதரகம் கடந்த நான்கு நாட்களில் முக்கிய அறிக்கையை வெளியிட்ட திற்கான காரணம் சமிபத்தில் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இராணுவத் தலைவர் ஃபுவாட் ஷுக்ரின் படுகொலைகலால் நாட்டில் மோதலுகான அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன

டெபி புயல் புளோரிடாவை நெருங்கும் போது type 1 வகை சூறாவளியாக வலுப்பெற்று, திங்கட்கிழமை அதிகாலை பிக் பெண்ட் பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்தி ,புயல் அதிகபட்சமாக (120kph) வேகத்தில் காற்று வீசும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. தம்பாவின் மேற்கு-தென்மேற்கு மற்றும் வடக்கே (19 kph) வேகத்தில் நகர்கிறது. இந்த புயல் புளோரிடாவின் வளைகுடா கடற்கரையில் 10 அடி வரை வீச கூடும். என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. ஜார்ஜியா மற்றும் தென் கரோலினாவின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை 30 அங்குல மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் புளோரிடாவில் வாரம் முழுவதும் 18 அங்குலங்கள் வரை மழை பெய்யக்கூடும். டெபி புயல் செவ்வாய்கிழமை தெற்கு ஜார்ஜியா வழியாக ஆரம்பித்து புளோரிடா முழுவதும் பயணிக்கும். இந்த புயல் புதன் முதல் வெள்ளி வரை தென் கரோலினாவைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் புளோரிடாவின் 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அவசரகால நிலைக்கு கவர்னர் ரான் டிசாண்டிஸ் கொண்டு வந்துள்ளார்.

What do you think?

ஒரு அலுவலக உதவியாளரை கூட அனுப்ப முடியவில்லை என்று லெப்ட் ரைட் வாங்கிய மாவட்டம் வருவாய் அலுவலர்

குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இட ஒதுக்கீடு… சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு