மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம் நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழக அரசிடம் விமானத்துறை அதிகாரிகள் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அதற்கேற்றார் போல் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை டிவிட்டரில் கனிமொழி தெரிவித்துள்ளார் என நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் நேற்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம். விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் டாஸ்மார்க் எண்ணிக்கை மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களிடையே கவலையாக உள்ளது.
திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 3000 கோடி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காஷ்மீர், ஹரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அங்கு சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன்முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர்.
அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.வெளிநாடு சென்று உரிய முதலீடுகளை கொண்டு வராததால் முதலமைச்சரும் திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம்.
விமான கண்காட்சிக்கு சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கனிமொழியின் டிவிட்டர் கருத்துக்கு, தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் டிவிட்டரில் சொல்லி தெரிவித்திருக்கிறார். அதனை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.