தகதகாய சூரியன் ஒளிர்ந்து கொண்டு இருப்பதால் எந்த திரைநட்சத்திரங்களும் மின்னமுடியாது என்றும் உலக நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி அலகில் ( GDP) முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டிற்கு இணையாக நமது முதல்வர் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்
என நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பவளவிழா மற்றும் மூன்றாண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு ஏற்பாட்டில் நெல்லைமாவட்டம் கூடங்குளத்தில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி தலைமையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தமிழச்சிதங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் தகதகாய உதசூரியன் ஒளிர்ந்து கொண்டு இருப்பதால் எந்த நட்சத்திரங்களும் மின்னிவிட முடியாது, குறிப்பாக எந்த திரைநட்சத்திரங்களும் மின்னிவிட முடியாது ஒளிர்வது ஒரே ஒரு உதயசூரியன் மட்டும்தான்.
கல்லடிக்கும் சொல்லடிக்கும் கலங்காத இயக்கம் இது, மகான்கள், மடாதிபதிகள் சலசலப்புக்கு அஞ்சாத இயக்கம் இது சுயநல வாதிகளை தூக்கி எரிந்துவிட்டு பதவி பித்துபிடித்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைக்கின்ற உடன் பிறப்புக்களுக்கு தக்க அரியாசனம் தருகின்ற இயக்கம் திமுக. நமது திமுகவின் இதயம் இளைஞரணி என்றால் அந்த இளைஞரணிக்கு மேலும் வலுசேர்க்கின்ற வண்ணம் செயல்படுவதுதான் மாணவரணி, திமுகவின் பலம் என்பது படிக்கின்ற இளைய தலைமுறையின் அறிவு செல்வத்தில் அடங்கியிருப்பதால்தான் அண்ணா எது முறையோ அதன்படி நடங்கள் எதிர்ப்புக்கு அஞ்சாதீர்கள், மதத்தின் முன் மண்டியிடாதீர்கள் மானமே மனிதனை மனிதனாக்குகிறது என்று முழங்கி உலகத்தில் இருக்கின்ற அனைத்து செல்வங்களையும் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் , தமிழ் மன்றங்களை நிறுவி கலந்துரையாட வேண்டும்
என கூறி மாணவர்களுடைய படைக்கலங்களாக கழகத்தை மாற்றிக் காட்டினார் இளைஞர்களிடம் எழுச்சியும் ஒரு உத்வேகமும் உண்டு என்பதால்தான் மாணவ சமூதாயத்தை நாம் சிந்திக் கின்ற அறிவை ஆயுதமாக கொள்ளுகின்ற சமூதாயமாக மாற்றவேண்டும் என்று மாணவர் அணி என்ற அமைப்பை உருவாக்கி இன்று பலம் மிக்க அமைப்பாக உள்ளது . திமுகவை ஒரு சமயத்திற்கு எதிரிகள் போல சித்தரிக்கிறார்கள் நெல்லையப்பர் கோவிலை முதன் முதலில் சீரமைப்பு செய்தவர் கலைஞர்தான் இதுபோன்று ஈரடுக்கு மேம்பாலம், செல்லபாண்டியன் மேம்பாலம் என நெல்லைக்குமட்டும் எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார் கலைஞர்.
கூடன்குளம் அணுமின் நிலைய சி பிரிவு பணிக்கு அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது இது மறுக்கப்படுவதாக இங்கு பேசியவர் கோரிக்கை வைத்தார் நிச்சயமாக இதனை பாராளுமன்றத்திலே எழுப்பி நியாயமான குரலை பதிவு செய்வேன்.
உலக நடாடுகளில் உள்நாட்டு உற்பத்தி அலகில் ( GDP) முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டிற்கு இணையாக நமது முதல்வர் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார் நமது முதல்வர் அவர்கள் வல்லமை மிகுந்த திட்டங்களை மட்டும் அல்ல சமூதாயத்தில் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களை தீட்டியுள்ளார். கலைஞர் உரிமைத்தொகை, தமிழ்புதல்வன், தாயுமானவன், விடியல் பயணம் என திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .
இந்த பவள விழா கொண்டாட்டம் என்பது நமக்கு ஒரு உத்வேகத்தை தருகின்ற தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சர் ஆக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இவர்களின் துணையோடு தமிழ்நாட்டை ஒரு உறுதிமிக்க வலிமை மிக்க மாநிலமாக மட்டுமல்லாமல் சமூக நீதிக்காக ஒரு மாநிலமாக மாற்றி அமைக்கின்ற விழாவாக இருக்க வேண்டும் 2026- தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியனுக்குதான் வாக்குகள் பதிவாகும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட அவைத்தலைவர் கிரகம்பெல், மாவட்ட ஊராடரசி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் பாளையங்கோட்டை ஒன்றிய குழு தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி, மைக்கேல், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.