புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் பொது மக்களுக்கான அவசர எச்சரிக்கை
கடந்த ஒரு மாதமாக WhatsApp call மூலம் தொடர்பு கொண்டு ஏதாவது ஒரு காவல் நிலையத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஆய்வாளர் பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் பெண்ணை ஒரு வழக்கு சம்பந்தமாக பிடித்து வைத்துள்ளோம் இந்த வழக்கில் அவரை சேர்க்காமல் இருக்க உடனடியாக நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாய் பணத்தை உடனே அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அந்த வழக்கில் உங்கள் பெண்ணை சேர்த்து விடுவோம் என்றும், அவர்கள் அருகில் பெண் அப்பா, அப்பா என்று அலறுவது போல் சத்தத்தை உருவாக்கி பொதுமக்களை இணைய வழி மோசடிக்காரர்கள் மிரட்டி பணத்தை பெற்று வருகின்றனர்.
இது சம்பந்தமாக 17 புகார்கள் இதுவரை இணைய வழி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
ஆறு பெற்றோர்கள் இதுவரை அவர்களின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை செலுத்தி உள்ளனர்.
இது சம்பந்தமாக இணைய வழி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட அழைப்புகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது போன்ற தங்கள் மகளையோ மகனையோ ஒரு வழக்கிற்காக காவல்துறையை சேர்ந்தவர்கள் பிடித்து வைத்திருக்கின்றோம் என்று எந்த ஒரு அழைப்பு வந்தாலும் அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
உடனடியாக இணைய வழி காவல் நிலையத்தை 1930 என்ற இலவச அழைத்து புகார் செய்யுமாறு புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு புதுச்சேரி காவல் துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.
மேலும் இதுபோன்று நேற்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் பெண்களின் அப்பாவிற்கு வரவே இது சம்பந்தமாக அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இணைய வழி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது..