புவனகிரியில் உள்ள பாண்டுரங்கர் ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம்
புவனகிரியில் உள்ள பாண்டுரங்கர் ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி கடை வீதியில் உள்ள ஆர்ய வைஸ்ய பஜனை மடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பாண்டுரங்கர் சுவாமி ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக பாண்டுரங்கர் சுவாமிக்கு கோகுல அஷ்டமி திருமஞ்சனம் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வாக உறியடி உற்சவம் நடைபெற்றது.
இந்த விழாவில் உறியில் விழலை கட்டி அதில் தேங்காய் பூ பணம் ஆகியவற்றை வைத்து உறியடி நிகழ்வு நடைபெற்றது.
ஆலய நிர்வாக சார்பில் உறியடித்த பக்தர் மேல் சுற்றி இருந்த பக்தர்கள் தண்ணீரை வாரி இரைத்தனர்.
இதற்கிடையில் பக்தர் அந்த உறியினை அடித்து பரிசு பொருளை பெற்றுக்கொண்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.