நடிகர் சிங்கமுத்துவிடம் நஷ்டஈடு கேட்டு வடிவேலு வழக்கு
நடிகர் சிங்கமுத்துவிடம் நஷ்டஈடு கேட்டு வடிவேலு கோர்ட்டில் வழக்கு தாக்கல்.
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து சில Youtube சேனல்களுக்கு பேட்டி அளிக்கும் போது, நடிகர் வடிவேலுவை பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார்,
இதற்காக அவரிடம் நஷ்ட ஈடாக 5 கோடி கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வடிவேலு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில், அவர் கொடுக்கும் எல்லாம் பேட்டியிலும் தன்னைப் பற்றி அவதூரான கருத்துக்களை சிங்கமுத்து பரப்பியதற்காகவும் இதனால் தனது பெயர் ரசிகர்களிடமும் மக்களிடமும் கெட்டுப் போய்விடும், தன்னை பற்றி கருத்துக்களை தெரிவிப்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த சிங்கமுத்து, திரையுலகத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து நான் பேட்டிகள் கொடுத்து வருகிறேன், நான் யார், மனதையும் புண்படுதவில்லை’ எனக்கு நோட்டீஸ் அனுப்பிய வடிவேலு..வுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி எனது வருத்தத்தை தெரிவித்துள்ளேன்.
ஆனால் அவர் என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் குற்றம் சுமத்தினார்.
மேலும் வடிவேலுவை பற்றி எனக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்க கூடாது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனதில் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்திருக்கிறார்.