வைரவேல், வைர கிரீடம் மற்றும் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி
மதுரை அழகர்மலை மீது உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி 7ஆம் நாளை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்.. பக்தர்களுக்கு முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து காட்சியளித்தார்.. அரோகரா! கோஷங்கள் முழங்க பக்தர்கள் வழிபாடு…
மதுரை மாவட்டம் அழகர் மலை மீது உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மார்கழி 7ஆம் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி ஏழாம் நாளை முன்னிட்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதமாக வைரவேல், வைர கிரீடம் மற்றும் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அரோகரா! அரோகரா! என கோஷங்கள் முழங்க முருக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். தினந்தோறும் ராஜவேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் காட்சி தரும் முருகப்பெருமானுக்கு வண்ண மலர்களால் மாலை அலங்காரங்கள் செய்து சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன.
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் குவிந்தனர்.