in

விஷவாயு குறித்து செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் எம்பி பேட்டி


Watch – YouTube Click

விஷவாயு குறித்து செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் எம்பி பேட்டி

விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம். முதலமைச்சர் ரங்கசாமி தான் பொறுப்பேற்க வேண்டும். அறிவித்த நிவாரண தொகையை காலம் கடத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.வைத்திலிங்கம் எம்பி பேட்டி.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் விஷ வாயு பாதிக்கப்பட்டு மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் சுகாதார துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் இந்த விபத்திற்கு முழு பெறுப்பேற்க வேண்டும். அதே போல் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரும் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சரின் அலட்சியத்தால் தான் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த ட்ரீட்மெண்ட் பிளான்ட்டில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. மக்களின் கதறல்களை முதலமைச்சர் காதில் வாங்குவதில்லை. உடனடியாக அரசு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்களை பற்றி சிறிது கூட கவலையே படவில்லை இந்த அரசு. உடனடியாக மக்களுக்கு விரிவான விளக்கத்தை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பாதாள சாக்கடை திட்டமே முழுவதுவமாக கேள்வி குறியாக இருக்கும் திட்டம். பாதாள சாக்கடை திட்டத்தின் அனைத்து பணிகளையும் காண்டிராக்ட்டில் பணி கொடுத்துள்ளனர்.யார் ஆட்சியில் இருந்தால் என்ன, எப்பொழுது செய்தால் என்ன மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.இதில் விபத்து சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேறும் கெமிக்கல் கழிவு கடந்த 3 வருடங்களாக உள்ளது. அதனால் தான் இவ்வளவு பிரச்சனை. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம் தொகை அறிவித்ததோடு சரி இதுவரை கொடுக்கவில்லை. நிவாரண பணம் அவரது கட்சிகாரர்களுக்கு தான் போகும். மக்களுக்கு போகாது.ஏற்கனவே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இதுவரை அரசு அறிவித்தபடி நிவாரணம் தொகை வழங்கப்படவில்லை.மக்கள் முதல்வர் நிவாரண தொகைக்காக முதலமைச்சர் அலுவலகத்திற்கு அலைந்துகொண்டு தான் இருப்பார்கள். அறிவித்த நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்…


Watch – YouTube Click

What do you think?

செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை

புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர்