in ,

தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு

தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு

 

தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் மைய பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக மாதாந்திர பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகின்றது. ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷ தினமான இன்று மாலையில் மூலவா் சன்னதிமுன் அமைந்துள்ள நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையானபொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சந்தணத்தாலும் மலா்களால் அலங்காிக்கப்பட்ட நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முன்னதாகநெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது . பின்னர் பிரதோஷநாதா் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.

காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதை தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு அா்ச்சனை நடைபெற்று கோபுர ஆரத்தி கற்பூர ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ வழிபாட்டினை செய்தனர். வந்திருந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

குத்தாலம் ஓங்காளீஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

சூர்யாவின் வெறியாட்டம்…. கங்குவா movie Review and Theatre Response