திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்…..வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்ரியா
திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்….. திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்ரியா
சில மாதங்களுக்கு முன் வாணி ராணி சீரியல் நடித்த சாரா என்ற ஜெனிப்ரியா தனக்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலை செய்யும் துநேசன் என்பவருடன் திருமணம் நடைபெற போவதாக செய்தியை வெளியிட்டார் இது சம்பந்தமான வீடியோ நமது சேனலில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டது .
தற்பொழுது துநேசன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவரைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தனக்கு கிடைத்திருப்பதாக ஜெனிபிரியா கூறி இருக்கிறார். தனக்கு துரோகம் செய்த துநேசனின் உண்மை முகத்தை வெளிக்கொணர இந்த செய்தியை எல்லா சேனல்கலிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று பர்சனலாக மெயில் செய்திருக்கிறார். ஜெனிலியாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத போது சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி செலிபிரிட்டிஸ்க்கு மேக்கப் போடுவது beauty courses நடத்தி வருகிறார்.
இவருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த துநேசனுக்கும் நவம்பர் 8 மற்றும் 11ஆம் தேதிகளில் திருமணம் , ரிசெப்ஷன் நடைபெற போவதாகவும் அறிவித்திருந்தார். செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நலங்கு நிகழ்ச்சி நடந்ததாகவும் துநேசன் குடும்பம் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து இந் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் . 100 பவுன் நகைகளை கேட்டார்கள் .கல்யாணம் முடிந்ததும் கொடுக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவர்கள் நீ நகையை எடுத்துக் கொண்டு வந்தால் ஏர்போர்ட் கஸ்டம்ஸில் மாட்டி விடுவாய், நான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதால் என்னிடம் நகையை கொடு அதுதான் உனக்கு சேஃப் என்றார் நானும் அவரை நம்பி 50 சவரன் நகையை கொடுத்தேன். சில தினங்கள் கழித்து pre…வெட்டிங் ஷூட்டிங்…காக சிங்கப்பூர் சென்றேன் அங்கு சென்றபோதுதான் எனக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
சிங்கப்பூரில் அவர்களுடைய relatives…வீட்டிற்கு அழைத்து சென்றார். எல்லோரும் அவரைப் பற்றி தவறாக கூறினார்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது மேலும் அவரது முதல் மனைவியை அவர்தான் துரத்தி விட்டார் என்றும் அவருடைய மகனின் போக்கு சரி இல்லை அதைப்பற்றி கேட்ட பொழுது அவன் அப்படித்தான் அதைப்பற்றி எல்லாம் நீ கண்டுக்காதே அப்படின்னு சொன்னார். ப்ரீ வெட்டிங் முடிந்து சென்னை வந்த பிறகு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை நான் போன் செய்த போதும் அவர் எடுக்கவில்லை இந்த கல்யாணம் …சரியா வராத்து….இன்னு நினைச்சு நான் என் நண்பர்கள் மூலமாக அவரிடம் பேசினேன் உடனே அவர் உன்னுடைய பொருட்களை எல்லாம் வந்து எடுத்துக் கொண்டு போ அப்படின்னு சொன்னார் நானும் அவங்க வீட்டுக்கு போனபோது வாசலிலே நிற்க வைத்து என்னுடைய பொருட்களை கொடுத்தார்கள் என்னுடைய நகை எங்கே என்று கேட்டதற்கு அப்படி எதுவும் நீ கொடுக்கவில்லையே என்று என் தலையில் இடியை இறகினார்கள்.
அவர் வெளியே வரவில்லை அவர் அம்மாவும் தம்பியும் தான் வெளியே வந்து பேசினார்கள். துநேசனை எனக்கு matrimonial மூலம் பழக்கம் அவருக்கு மனைவி இல்லை தனியாக குழந்தையுடன் கஷ்டப்படுகிறார் என்று அவர்மேல் ஒரு சாஃப்ட் corner வந்ததால் கல்யாணத்துக்கு நான் சம்மதித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி துரோகம் செய்து இருக்கிறார். என் வக்கீலுடன் ஆலோசனை செய்து வருகிறேன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் …இல் அவர் மேல் complaint கொடுத்திருக்கிறேன் .நான் நகை கொடுத்ததற்கு ஆதாரம் அவருடன் தங்கியிருந்த ஹோட்டலில் இருக்கும் footage மற்றும் போட்டோஸ் இதை வைத்து அவர் மேல் புகார் கொடுக்க போவதாக ஜெனிபிரியா கூறியிருக்கிறார்.