வத்தலகுண்டு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா
வத்தலகுண்டு அருகே அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ப.விராலிப்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா. இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்காக நேற்று காலை மங்கல இசை முழங்க முதலாம் கால யாகசாலை பூஜைகள் செய்து, மகா கணபதி பூஜை, வாஸ்து ஹோம பூஜை நடைபெற்றது. அன்று மாலை இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை இன்று கோபூஜை, நாடி சந்தானம், மகா சாந்தி ஹோமங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கோபுர கலசத்திற்கு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஓம குண்டத்தில் இருந்து குருக்கள் தலைமையில் எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து கடம்புறப்பாடிற்க்குபின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கருட பகவான் வானில், வட்டமிட்டு சுற்றியதில் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
கலசத்தில் ஊற்றிய புண்ணிய நீரை பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் விராலிப்பட்டி சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான கிராம பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காளியம்மன் தரிசனம் பெற்றனர்.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது.