டிடிஎப் வாசன் தரப்பு வழக்கறிஞர் விசி.சங்கர நாரயணன் பேட்டி
அண்ணாநகர் காவல் நிலையம் சார்பில் TTF வாசன் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15ஆம் தேதி நடந்ததாக கூறி 28ஆம் தேதி அவசரமாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது
விசாரணைக்கு கூட அழைக்காமல் அவரை சென்னையில் இருந்து கைது செய்திருக்கிறார்கள்
இந்த வழக்கில் IPC 308 என்பதை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது அந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்ற பட்சத்தில் மற்ற அனைத்து பிரிவுகளும் பிணையில் விடக்கூடிய பிரிவுகளாக இருக்கின்ற பட்சத்தில் எங்களுடைய வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரை நிபந்தனையில் விடுதலை செய்திருக்கிறார்கள்
இது நீதித்துறை தன்னுடைய நீதி பரிபாலனத்தை நிலைநாட்டிருக்கிறது
வளர்கின்ற அந்த பையன் வரும் படப்பிடிப்பில் ஈடுபட இருக்கின்ற காரணத்தினால் திரைப்படத்தில் நடிக்க உள்ள காரணத்தினால் அதனுடைய ஒப்பந்தத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கின்றோம்
எதிர்காலத்தில் இந்த இளைஞருக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கின்ற பட்சத்தில் நீதிபதி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவரை பிணையில் இருக்கிறார்கள்
இது சம்பந்தமாக எதிர்காலத்தில் வேறு யாரும் இதுபோன்று பின்பற்றுவர்கள் இருக்கக்கூடாது என்றும் நீதிபதி கடிதம் எழுதி தர வேண்டும் என்றும் தன்னைத் தொடரும் பாலோவர்கள் யாரும் எதிர்காலத்தில் இது மாதிரியான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்கின்ற நிபந்தனையில் நீதிபதியிடம் தெரிவித்தபட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு பிணையில் விடுத்திருக்கிறார்கள் என்றார்.